தேவையான பொருள்கள்
மைதா- 4 மேசைக்கரண்டி
பால்- 1 கிண்ணம்
மிளகு- அரை தேக்கரண்டி
பனீர்- 200 கிராம் (துருவியது)
எண்ணெய்- 4 மேசைக்கரண்டி
உப்பு- 2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள்- அரை தேக்கரண்டி
உருளைக் கிழங்கு- 5 வேகவைத்தது
பிரெட் தூள்- துருவியது சிறிதளவு
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெயை சூடு செய்து, அதில் மைதா சேர்த்து சிறு தீயில் இரு நிமிடங்கள் வைக்கவும். அதனுடன் பாலைச் சேர்த்துவிடாமல் இறக்கி பனீர் துருவலையும் உருளைக்கிழங்கு மசித்தது, பிறகு உப்பு, மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து உருண்டை பிடித்து, வடைகளாகத் தட்டவும். வடைகளை பிரெட் தூளில் புரட்டி பிரிட்ஜ்ஜில் சிறிதுநேரம் வைத்தெடுத்து பொரிக்கவும்.
The post பனீர் கட்லட் appeared first on Vanakkam London.