• Sun. Oct 27th, 2024

24×7 Live News

Apdin News

பமீலா ஹாரிமேன்: சர்ச்சிலின் மருமகள் நாஜிக்களுக்கு எதிரான ரகசியம் ஆயுதமாக மாறியது எப்படி?

Byadmin

Oct 27, 2024


பமீலா ஹாரிமேன் :  நாஜிகளுக்கு எதிராக சர்ச்சில் பயன்படுத்திய `ரகசிய ஆயுதம்'

பட மூலாதாரம், Penguin Random House

வின்ஸ்டன் சர்ச்சிலின் `உயர்குடி’ மருமகள் மற்றும் நம்பிக்கைக்குரிய பெண் பமீலா ஹாரிமேன் “அரசியலில் பாலியலை பயன்படுத்தி மிகுந்த செல்வாக்கைப் பெற்ற நபராக” கருதப்பட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், அவரை பற்றிய பார்வைகள் மாறவில்லை. சிலரின் பார்வையில் அவர் ஒரு புத்திசாலி, சிலருக்கு அவர் ஒழுக்கங்கெட்டவர், சிலரைப் பொறுத்தவரை அவர் வெறுக்கத்தக்கவர்.

பமீலா, பெரில், டிக்பி, சர்ச்சில், ஹேவர்ட், ஹாரிமேன் என அவர் ஆறு பெயர்களில் அழைக்கப்பட்டார். வாஷிங்டனில் செல்வாக்கு பெற்ற பிரிட்டனை சேர்ந்த உயர்குடிப் பெண் இவர். பிரான்சுக்கான அமெரிக்க தூதராக இருந்தவர். 20ஆம் நூற்றாண்டின் அரசியல் மற்றும் கலாசாரத்தில் பல பிரபலங்களின் அறிமுகங்களைப் பெற்றவர்.

பமீலாவுக்கு 20 வயதாக இருந்தபோது, ​​அவருடைய மாமனார் வின்ஸ்டன் சர்ச்சில் அவரை “மிகவும் விருப்பமான மற்றும் உறுதியான ரகசிய ஆயுதமாக” கருதினார் (புதிய சுயசரிதையில் குறிப்பிடப்பட்ட தகவல்).

இரண்டாம் உலகப் போரின்போது, ​​மது, உணவு, வசீகரம் ஆகியவற்றால் முக்கியமான அமெரிக்க பிரமுகர்களைக் கவர்ந்ததன் மூலம், அவர்களை நாஜிகளுக்கு எதிரான முடிவுகளை எடுக்க வைத்தார். இது பிரிட்டிஷுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஏற்படுத்தியது.

By admin