• Tue. Jan 13th, 2026

24×7 Live News

Apdin News

பயணத்தின் போது ஆண்களை விட பெண்களுக்கே வாந்தி அதிகம் வருவது ஏன்?

Byadmin

Jan 13, 2026


பயண நேரத்தில் அதிகமாக குமட்டல், வாந்தி ஏற்படுகிறதா ? காரணம் இதுதான்!

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், இஃப்திகார் அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

வாகனப் பயணத்தின் போது வாந்தி எடுப்பது ஒரு பொதுவான பிரச்னையாகும். மருத்துவ மொழியில், இது மோஷன் சிக்னஸ் (motion sickness) என்று அழைக்கப்படுகிறது.

பயணத்தின் போது இது ஏன் நிகழ்கிறது? மனம், கண்கள் மற்றும் உடல் சமநிலைக்கு இடையே என்ன தொடர்பு இருக்கிறது? இதைத் தடுக்க முடியுமா?

மோஷன் சிக்னஸ் என்றால் என்ன?

மோஷன் சிக்னஸ் என்பது, ஒரு நபர் பயணத்தின் போது தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி அல்லது அமைதியின்மையால் அவதிப்படும் நிலை. இந்த பிரச்னை பெரும்பாலும் கார், பேருந்து, ரயில், கப்பல் அல்லது விமானப் பயணத்தின் போது ஏற்படுகிறது.

சிலர் மலைப்பாதைகளில் இந்த பிரச்னையை அடிக்கடி அனுபவிக்கின்றனர். வாகனப் பயணத்தில் ஏற்படும் இந்த பிரச்னை கடல் அல்லது விமானப் பயணத்தின் போது ஏற்படும் பிரச்னைக்கு ஒப்பானதாகும்.

டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் மோசின் வாலி கூறுகையில், “நமது மூளை நாம் பயணிக்கும் போது, உண்மையில் கண்கள் மற்றும் காதுகளில் இருந்து வெவ்வேறு சமிக்ஞைகளைப் பெறுகிறது.” என்றார்.

By admin