* கருவேப்பிலை துவையலுக்கு உளுந்தம் பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்து போட்டால் துவையல் சுவையாக இருக்கும்.
* உருளைக்கிழங்கை உப்பு கரைத்த வெந்நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டால் சில நாட்களுக்கு உருளைக்கிழங்கு கெடாமல் பிரெஷாக இருக்கும்.
* குடிக்கும் நீர் மணமாகஇருக்க வேண்டும் என்றால் வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியைப் போட்டு வைத்தால் நன்றாக இருக்கும்.
* ஆப்பிள் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயம், பெருங்காயத்தூள் கலந்து தாளித்தால் சுவையான ஊறுகாய் தயார்.
இதையும் படியுங்கள்: கொத்தமல்லி கார உருண்டை
* காலையில் கீரை சமைக்க இரவே வாங்கி விட்டால், அது வாடிப் போகாமல் இருக்க கீரையின் வேர் பாகத்தை நீரில் மூழ்கும்படி வைக்கலாம்.
* லஸ்ஸியில் சேர்க்கும் சர்க்கரை அளவை குறைத்து அதற்கு பதிலாக தேன் கலந்து பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.
* அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க உளுந்தம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் அப்பளங்களை மேலாக வைத்து இறுகி மூடிவிட்டால் போதும். வெயிலில் உலர்த்தியது போலாகி விடும்.
* நெய் காய்ச்சும் போதே வெந்தயக்கீரை, முருங்கைக்கீரையை போட்டு லேசாக வதக்கிக்கொள்ளவும். நன்கு ஆறிய பிறகு இந்த வெந்தயக்கீரை, முருங்கைக்கீரையை சப்பாத்தி மாவில் பிசைந்து சப்பாத்தி செய்து பாருங்கள். சப்பாத்தி ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.
* சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயத்தில் சிறிதளவு வெந்தயப் பொடி தூவினால் வாசனையாக இருக்கும்.
* வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு முன்பு வெண்டைக்காயை நறுக்கி வெயிலில் கால் மணி நேரம் உலர வைக்கவும். பிறகு பொரியல் செய்தால் வழுவழுப்பு நீங்கி விடும்.
The post பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக… appeared first on Vanakkam London.