• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

பரந்தன் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை

Byadmin

Aug 20, 2025


பரந்தன் – கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும் பரந்தன் – கரைச்சி – முல்லைத்தீவு வீதியின் 50ஃ1 ஆம் இலக்க பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் களப்புக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டில் இறுதியாக திருத்தப்பட்டுள்ள குறித்த பாலம் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது. அதனால், வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் இருவழிப் பாதையுடன் கூடிய புதிய பாலமாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறைமையின் அடிப்படையில் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளுக்கமைய, கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான எம்.எஸ். ஆர்.ஆர். தனியார் நிறுவனத்துக்கு பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்; சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

The post பரந்தன் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை appeared first on Vanakkam London.

By admin