• Fri. Jun 19th, 2026

24×7 Live News

Apdin News

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்தவர்கள் கூறுவது என்ன? – பிபிசி தமிழ் கள ஆய்வு

Byadmin

Jun 19, 2026


'விமான நிலையம் வராது... ஆனால்?' – பரந்தூர் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு
படக்குறிப்பு, கடந்த சில வாரங்களாகவே மனதளவில் நிம்மதியாக இருப்பதாகக் கூறுகிறார், ஏகனாபுரம் கிராமத்தில் வசிக்கும் அலமேலு

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

(பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து பிபிசி தமிழ் மேற்கொண்ட கள ஆய்வு)

“விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கும் இடமாகப் பார்த்து விமான நிலையத்தைக் கொண்டு வாருங்கள். வளர்ச்சிதான் மக்களின் முன்னேற்றம். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களைப் பெரிதும் பாதிக்கும்.”

“விமான நிலையமே வரக்கூடாது என்றெல்லாம் நான் கூறவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் கூறுகிறேன்.”

கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பரந்தூரில் தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய் இவ்வாறு பேசினார். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பரந்தூரில் கள நிலவரம் முற்றிலும் மாறிவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக நிலம் கையகப்படுத்துதல், பத்திரப் பதிவு போன்றவை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால், மாநில அரசிடம் இருந்து தங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்கிறார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிநேகா.

By admin