• Sun. Jan 11th, 2026

24×7 Live News

Apdin News

பராசக்தி திரைப்படம் பேசும் அரசியல் என்ன? சிவகார்த்திகேயன் பிபிசி தமிழுக்கு பேட்டி

Byadmin

Jan 10, 2026


பராசக்தி திரைப்படம் பேசும் அரசியல் என்ன? சிவகார்த்திகேயன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பட மூலாதாரம், Dawn Pictures

நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் படங்களில் ஒன்றாக பராசக்தி இருந்தது.

பராசக்தி கதை, ரஜினியின் அடுத்த படம், ஜன நாயகன், அமரன், சமூக ஊடகத்தின் தாக்கம், தேசிய விருது எனப் பல விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பிபிசி தமிழிடம் பேசினார்.

”நீங்கள் இதுவரை நடித்த படங்களிலே பராசக்திக்குதான் கடைசி நேரம் வரை ரிலீஸ் டென்ஷன் போல. ஒரு வழியாக சான்றிதழ் கிடைத்துவிட்டதே” என்று நடிகர் சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது ”உங்களுக்குத் தெரிய இது முதல் படம். என்னுடைய 4, 5 படங்கள் வெளியீட்டில் வேறு மாதிரியான பிரச்னைகளைச் சந்தித்தன” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “எனக்கும், திரைத்துறையில் உள்ள சிலருக்கும் அந்தப் பிரச்னைகள் தெரியும். இன்னும் சொல்லப்போனால் பொங்கலுக்கு வெளியான என் முந்தைய படங்களான ரஜினிமுருகன், அயலான், டாக்டர் ஆகியவை பிரச்னைகளுடன்தான் வெளியாயின.

பராசக்திக்கு சான்றிதழ் வராததால், பட ரிலீசுக்கு இரண்டு நாட்கள் வரை திக்திக் மனநிலையில் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். எதையும் வெளிக்காட்டாமல் பேசினோம். எப்படியாவது மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட வேண்டுமென்று நினைத்தோம். இப்போது நிம்மதியாக இருக்கிறது. எனக்கு இது 25வது படம்” என்று சிரித்தபடி பேட்டிக்குத் தயாரானார் சிவகார்த்திகேயன்.

By admin