• Sun. Jan 11th, 2026

24×7 Live News

Apdin News

‘பராசக்தி’ படத்தில் வரும் மூன்று முக்கிய சம்பவங்கள் உண்மையில் எப்படி நடந்தன?

Byadmin

Jan 10, 2026


பராசக்தி, தமிழ்நாடு, இந்தி எதிர்ப்பு

பட மூலாதாரம், X/Dawn Pictures

இன்று (ஜனவரி 10) வெளியாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் 1965ஆம் ஆண்டின் மொழிப் போரை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மொழிப் போரின்போது நடந்த பல முக்கிய சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்தச் சம்பவங்கள் உண்மையில் எப்படி நடந்தன?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்து வெளியாகியுள்ளது ‘பராசக்தி’ திரைப்படம். 1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்புப் போரில் சகோதரனை இழந்த நாயகன், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது, அவருக்கு ஏற்படும் காதல், நாயகனை குறிவைத்து துரத்தும் உளவுத் துறை அதிகாரி என படம் நகர்கிறது.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின்போது தமிழ்நாட்டில் நடந்த பல நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் நகர்கிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் ராஜேந்திரன் துப்பாக்கிச் சூட்டில் இறப்பது, மதுரையில் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்படுவது, இந்திரா காந்தியை போராட்டக்காரர்கள் சந்திப்பது ஆகிய நிகழ்வுகள் போராட்டத்தின் முக்கியப் புள்ளிகளாகக் காட்டப்படுகின்றன.

By admin