• Thu. Oct 24th, 2024

24×7 Live News

Apdin News

பராமரிப்பு இல்லத்தில் மூவர் மரணம்; சந்தேகத்தின் பேரில் பெண் கைது!

Byadmin

Oct 24, 2024


இங்கிலாந்து – டோர்செட் (Dorset), ஸ்வானேஜ் (Swanage) பகுதி, உல்வெல் வீதியில் (Ulwell Road) உள்ள கெய்ன்ஸ்பரோ பராமரிப்பு இல்லத்தில் (Gainsborough care home) மூவர் உயிரிழந்தமை தொடர்பில் 60 வயது பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி மணரங்களுக்கான திட்டவட்டமான காரணங்கள் கண்டறியப்படாத போதிலும், இது கார்பன் மோனாக்சைடு விஷம் கசிந்தமையால் ஏற்பட்ட மணரம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று புதன்கிழமை (23) 05:20 மணியளவில் கெய்ன்ஸ்பரோ பராமரிப்பு இல்லத்தில் இருந்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

இதனையடுத்து விரைந்த அவசர சேவைகள் ஊழியர்களால் 07 பேர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஏனைய சுமார் 40 பேர் வரை சக்கர நாற்காலிகளின் உதவியுடன் குறித்த பராமரிப்பு இல்லத்திற்கு அருகிலுள்ள தேவாலயத்திற்கு மாற்றப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 60 வயதுடைய உள்ளூர் பெண் ஒருவர், நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“எங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக, நாங்கள் ஒருவரை கைது செய்துள்ளோம், இது மிகவும் அலட்சியமான செயல்கள் அல்லது குறைபாடுகள் உள்ளதா என்பதை நிறுவ, என்ன நடந்தது என்பது குறித்து எங்களால் முடிந்த தகவல்களை சேகரிக்கின்றோம்” என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட தனிநபர்களுக்கு சில சட்டப் பாதுகாப்பையும் வழங்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், இப்போது சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக இருப்பதால், ஊடகங்களும் பொதுமக்களும் ஊகங்களைத் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், மரண விசாரணை அதிகாரிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிவாயு விநியோக நிறுவனமான SGN, புதன்கிழமை முன்னதாக Gainsborough Care Homeக்கு அழைக்கப்பட்டதாகக் கூறியது.

கட்டிடத்தில் பாதுகாப்பு சோதனைகளை முடிக்க பொறியாளர்கள் அனுப்பப்பட்டதாக SGN கூறியது.

பராமரிப்பு இல்லத்தில்பராமரிப்பு இல்லத்தில்

By admin