• Wed. Feb 4th, 2026

24×7 Live News

Apdin News

பரிதலா: இந்தியாவில் 7 கிராமங்கள் இணைந்து தனி நாடாக இயங்கிய வரலாறு

Byadmin

Feb 4, 2026


பரிதலா : ஆந்திராவில் ஏழு சிறிய கிராமங்கள் ஒன்றிணைந்து ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கிய கதை உங்களுக்குத் தெரியுமா?

ஆந்திராவில் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள பரிதலா, அதன் வைரங்களுக்காகப் பெயர்பெற்றது . ஆனால், அந்த கிராமத்திற்கு வைரங்களை விடவும் மிகவும் மதிப்புமிக்க ஒரு வரலாறு உள்ளது. அதுவே பரிதலா குடியரசாகும்.

இன்று இந்தியக் குடியரசின் ஒரு பகுதியாக உள்ள இந்தச் சிறிய நகரம், ஒருகாலத்தில் பரிதலா குடியரசாக இருந்தது என்பதே தனிச்சிறப்பு.

இந்தப் பெயருக்குப் பின்னால், ஏழு சிறிய கிராமங்கள் ஒன்றிணைந்து ஒரு தனிநாடாக உருவான அபூர்வமான வரலாறு மறைந்து கிடக்கிறது.

இந்த கிராமங்கள், இந்தியா குடியரசாக மாறுவதற்கு முன்பே, குடியரசுகளாக இருந்தன.

குறுகிய காலத்திற்கு என்றாலும், ஒரு தனி நாடாக இருந்து வந்த இந்த கிராமத்தின் கதை மிகவும் சுவாரசியமான ஒன்றாக உள்ளது.

By admin