0
பருத்தித்துறை நகரை சென்றடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் இன்று (23) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் “திலீபன் வழியில் வருகிறோம்” என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்படுகிறது.
இந்த பவனி இன்று (23) பிற்பகல் 1.30 மணியளவில் பருத்தித்துறை நகர்ப் பகுதியை வந்தடைந்துள்ளது.
தியாக தீபம் தீலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக பவனி செல்லும் நிலையில், பருத்தித்துறை நகர் மக்களின் அஞ்சலிக்காக இன்றைய தினம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சன் டிபோல் டக்ளஸ் போல் மற்றும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது பருத்தித்துறை நகரப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊர்தியின் முன் பகுதியில் பெருந்தொகையான பட்டாசுகளை கொழுத்திய போது பருத்தித்துறை நகர் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.