2
கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளம் மற்றும் பயண இடையூறு ஏற்படக்கூடும் என்று இங்கிலாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மஞ்சள் வானிலை எச்சரிக்கை அமலுக்கு வந்துள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் பெரும்பகுதிகளில் பிற்பகல் 2 மணி வரை மழை எச்சரிக்கை அமலில் உள்ளது.
திங்கட்கிழமையுடன் கோடை முடிவடைந்த நிலையில், வெப்பமான கோடைக்குப் பிறகு, நாடு முழுவதும் குளிரான வெப்பநிலை, மழை மற்றும் காற்று எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை இரவு, வடகிழக்கு ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸ் ஆகிய இடங்களில் நட்சத்திரங்கள் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இரவு நேர நிலைமைகள் மோசமடையும். ஆனால், வடக்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் தெளிவான வானம் இருக்க வாய்ப்புள்ளது.
இதனையடுத்து, “கனமழை பயண இடையூறு மற்றும் இடங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும்” என்று வானிலை அலுவலகம் தனது வானிலை எச்சரிக்கையில், கூறியுள்ளது.