• Sun. Sep 13th, 2026

24×7 Live News

Apdin News

பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் ராணுவ வானங்கள் செல்லும்போது குண்டுவெடிப்பு.. 23 வீரர்கள் பலி

Byadmin

Sep 13, 2026


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பேலா மாவட்டத்தில் கஷாரி பகுதியில் உள்ள என்25 தேசிய நெடுஞ்சாலை வழியாக பாகிஸ்தானிய எல்லைப் படையை சேர்ந்த சுமார் 15 கவச வாகனங்கள் வழக்கமான ரோந்துக்காக சென்று கொண்டிருந்தது.

வாகான அணிவகுப்பு செல்லும் வழியின் முன்பாக ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வாகனங்கள் நெருங்கியதும் வெடித்துச் சிதறியது. இதில் அனுவகுப்பில் முதலில் சென்றுகொண்டிருந்த வாகனம் தீப்பற்றியது.

தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தில் இருந்த வீரர்கள் பலத்த காயமடைந்தனர்.

ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் 23க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த வீரர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள பேலா இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என சொல்லப்படுகிறது.

பலூச் விடுதலை ராணுவம்

இந்த தாக்குதலுக்குப் பின்னால் பிரிவினைவாத அமைப்பான பலூச் விடுதலை ராணுவம் இருப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக பலூச் விடுதலை ராணுவ அமைப்பு, பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள், வாகன தொடரணிகள் மீது தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

முன்னதாக இந்த மாத தொடக்கத்திலும் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் 25 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை நெருக்கடி

தாக்குதல் நடைபெற்ற என் 25 தேசிய நெடுஞ்சாலையானது, பலுசிஸ்தான் மாகாணத்தின் பொருளாதார மற்றும் ராணுவ உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.

இந்த நெடுஞ்சாலை, நாட்டின் மிகப்பெரிய தொழில் மையமான கராச்சியை, பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவுடன் நேரடியாக இணைக்கிறது.

லாஸ்பெலோ பகுதி கராச்சி எல்லைக்கு மிக அருகில் உள்ளது. மேலும் இந்தச் சாலை கடலோரப் பகுதிகளையும் மேற்கு பலுசிஸ்தானையும் துறைமுகத்துடன் இணைப்பதால், இங்கு அதிக அளவில் ராணுவப் போக்குவரத்து உள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக முழு தேசிய நெடுஞ்சாலையும் உடனடியாக மூடப்பட்டதுடன், சுற்றியுள்ள மலைப்பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

By admin