• Thu. Jan 8th, 2026

24×7 Live News

Apdin News

பல்கலை மாணவர்களுக்கு இடையில் தகராறு ; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

Byadmin

Jan 6, 2026


கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் இரு தரப்பு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நால்வர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகி வரும் நிலையில் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து சில நாட்களாக பல்கலைக்கழக விடுதியில் பட்டாசு வெடித்து விளையாடியுள்ளனர்.

இதனால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு எல்லை மீறியதால் தாக்குதலுக்குள்ளாகி நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin