• Thu. Feb 12th, 2026

24×7 Live News

Apdin News

பல்கலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை ; “அசித பெர்னாண்டோ”வின் சகா கைது!

Byadmin

Feb 11, 2026


கொழும்பில் மொரட்டுவை, கட்டுபெத்த பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “அசித பெர்னாண்டோ” என்பவரின் சகா என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து பத்து இலட்சம் ரூபா பெறுமதியான 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மொரட்டுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin