• Mon. Dec 15th, 2025

24×7 Live News

Apdin News

பல்லி தனது வாலை தானே துண்டித்துக் கொள்வது ஏன்? அறிவியல் பின்னணி

Byadmin

Dec 14, 2025


பல்லி தனது வாலை தானே துண்டித்துக் கொள்வது ஏன்? அறிவியல் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக, மனிதக் குடியிருப்புகளுக்கு நடுவே இருக்கக்கூடிய உயிர்ச்சூழல் மிக்க ஒரு சூழலியல் அமைப்பின் குறியீடுகளாக பல்லிகள் திகழ்கின்றன.

வீடுகள் உள்பட மனித கட்டுமானங்களில் அதிகமாக பூச்சிகள் பெருகிவிடாமல் கட்டுப்படுத்துவதில் அவற்றின் பங்கு குறிப்பிடத் தக்கது.

வீட்டுச் சுவர்களில் ஒட்டிக்கொண்டு பூச்சிகளை வேட்டையாடும் இந்தப் பல்லிகளின் வால் வெட்டப்பட்டால் அது மீண்டும் முழுதாக வளர்ந்து விடுவதைப் பார்த்து நம்மில் பலரும் வியந்திருப்போம்.

ஆனால், பல்லிகளே தங்களது வாலை துண்டித்து விடுவதுண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவைதம் உடலின் ஒரு பாகத்தைத் தாமே இழப்பது ஏன்? அந்த உறுப்பு மீண்டும் வளர்வது எப்படி? இதன் அறிவியல் பின்னணியை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

பல்லிகளின் வாழ்வியல்

பல்லிகளில் மரப் பல்லி, பாறைப் பல்லி எனப் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் வீடுகளில் காணப்படும், நாம் வழக்கமாகப் பார்க்கும் பல்லியினம்.

By admin