• Thu. Nov 6th, 2025

24×7 Live News

Apdin News

பல் எனாமல்: புதிய ஜெல் உங்கள் பல் சொத்தையை தடுக்குமா?

Byadmin

Nov 6, 2025


பல் சிகிச்சை அளிக்கும் புகைப்படம்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, இந்த ஜெல்லை உருவாக்கிய ஆய்வுக் குழு, அடுத்த ஆண்டுக்குள் இதை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளைக் கிடைக்கச் செய்ய முடியும் என்று நம்புவதாகக் கூறியது

பல் எனாமலை (Tooth Enamel) சீர்செய்து மீண்டும் உருவாக்க உதவும் ஒரு புதிய ஜெல், பல் சிகிச்சையில் ‘புதிய வாய்ப்புகளை’ உருவாக்கக்கூடும் என்று அதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பள்ளி மற்றும் ரசாயன மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறை வல்லுநர்கள், உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து எனாமலை பலப்படுத்தவும், பல் சொத்தையை தடுக்கவும் பணியாற்றி வருகின்றனர்.

பச்சிளங் குழந்தைகளில் எனாமல் எப்படி உருவாகிறதோ, அதே வழியைப் பின்பற்றி இந்த புரதம் அடிப்படையிலான பொருள் செயல்படுகிறது என்று பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இது உமிழ்நீரில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் அயனிகளுக்கு ஒரு ‘அடித்தளமாக’ செயல்படுகிறது.

இந்த ஆராய்ச்சியின் முழு முடிவுகளும் ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ (Nature Communications) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

பல் பற்சிப்பி  இழப்புக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு முந்தைய பிந்தைய புகைப்படங்கள்

பட மூலாதாரம், University of Nottingham

படக்குறிப்பு, எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி மூலம் எடுக்கப்பட்ட படம் – எனாமல் குறைந்த பல்லில் அப்படைட் கிரிஸ்டல்கள் அரிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது (இடதுபுறம்). மறுபுறம் இரண்டு வாரச் சிகிச்சைக்குப் பிறகு அதேபோன்ற பல்லைக் காட்டுகிறது

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சுமார் 3.7 பில்லியன் மக்கள் வாய்வழி நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் எனாமல் சிதைவு ஒரு முக்கிய காரணியாகும்.

By admin