• Mon. May 19th, 2025

24×7 Live News

Apdin News

பள்​ளிக்கல்​வி துறை​யில் பணி​யாற்றி வரும் அமைச்சு பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு | Job transfer counseling for secondary education department employees

Byadmin

May 19, 2025


பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் அமைச்சுப் பணியாளர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு மே 26 முதல் ஜூன் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட அமைச்சுப் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும். அதேபோல், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-26 கல்வியாண்டில் அமைச்சுப் பணியாளர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி அமைச்சுப் பணியாளர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு மே 26 முதல் ஜூன் 11-ம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது. இவற்றில் கண்காணிப்பாளர்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல், விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல் ஆகியவை மே 26, 29, 30-ம் தேதிகளில் வழங்கப்பட இருக்கிறது.

அதைத் தொடர்ந்து உதவியாளர் பணியிடத்துக்கு ஜூன் 4-ம் தேதியும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பதிவறை எழுத்தர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 6, 9, 11-ம் தேதிகளிலும் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.



By admin