• Mon. Apr 7th, 2025

24×7 Live News

Apdin News

பழம்பெரும் நடிகர் ரவிகுமார் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

Byadmin

Apr 6, 2025


தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான ரவிகுமார், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 71.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரவிக்குமார், மலையாளம், தமிழ் மற்றும் இன்னும் சில மொழிகளில், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமானது பாலச்சந்தரின் ‘அவர்கள்’ படத்தில்.

இவர், கதாநாயகனாக சில படங்களில் நடித்திருந்த போதும், குணச்சித்திர வேடங்களே இவரை அதிகம் பிரபலப்படுத்தின.

‘பகலில் ஒரு இரவு’ எனும் படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து அவர் நடித்த ‘இளமை எனும் பூங்காற்று’ பாடல் இன்றளவும் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது. அதன் மூலம் தமிழில் அறியப்பட்ட நடிகராக ஆன அவர், ஒரு கட்டத்துக்குப் பின்னர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், சென்னையில் நேற்று காலமானார்.

ரவிகுமாரின் உடல், சென்னை வளசரவாக்கத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடலுக்கு திரைத்துரையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

By admin