0
புதுமுக நடிகர் அரவிந்தராஜ் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேராண்டி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் இசையை வெளியிட்டார்.
இயக்குநர் ஆர். தங்கமணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேராண்டி’ எனும் திரைப்படத்தில் அரவிந்தராஜ், விந்துஜா நாயர், லதா, கராத்தே ராஜா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், லலிதா, ஓசூர் டோனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டி. மகிபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹித்தேஷ் முருகவேல் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேதா மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ் வழங்குகிறார்.
வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் ‘எழுச்சி தமிழர்’ தொல். திருமாவளவன், பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ் நிறுவனர் ராஜேஷ், தொழிலதிபர் ராமச்சந்திரன், சட்டத்தரணி உமா சங்கரி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் ஆர். தங்கமணி பேசுகையில், ” பேராண்டி முழுக்க முழுக்க கிராமிய கதை. குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய கதை. ஒரு பேரனுக்கும், பாட்டிக்கும் இடையே உள்ள பாசத்தை சொல்லும் படம். அந்தப் பேரனுக்கு ஒரு பெரிய இடத்து பெண் மீது காதல் வந்து விடுகிறது. அந்த காதலுக்கு எதிர்ப்பும் வருகிறது. அந்த காதலை அந்தப் பாட்டி எப்படி சமாளிக்கிறார்? தன்னுடைய பேரனை ஆளாக்கி.. அவன் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைக்கிறாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை” என்றார்.
எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் படக்குழுவினரை வாழ்த்தி பேசுகையில், ” பேராண்டி என்பது விரும்பும் பெண்ணை திருமணம் செய்து வைக்கும் கதை. திருமணம் என்றாலே இங்கு சாதி குறுக்கிடும். அக மண முறை என்பதுதான் சமூகத்தில் இருக்கிற நடைமுறை. சட்டத்திற்கு புறம்பான ஒரு நடைமுறைதான். ஆனால் அதுதான் சமூக நடைமுறையாக இருக்கிறது. ஒரே சாதிக்குள் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது நீண்ட காலமாக இங்கு இருக்கிறது. சட்டம் அதை தடை செய்யவில்லை. ஆனாலும் இப்படி ஒரு நடைமுறை இருக்கிறது. இது பல்வேறு பிரச்சனைகளுக்கு இடம் அளிக்கிறது. இது தொடர்பாக கொலை கூட நடைபெறுகிறது” என குறிப்பிட்டார்.