• Thu. Dec 26th, 2024

24×7 Live News

Apdin News

பழைய, பயன்படுத்திய கார்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு – பொதுமக்களை பாதிக்குமா?

Byadmin

Dec 24, 2024


பழைய மற்றும் பயன்படுத்திய கார்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘பழைய மற்றும் பயன்படுத்திய கார்கள் மீது இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்’

இந்தியாவில், வணிக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பழைய மற்றும் பயன்படுத்திய கார்களுக்கான (மின்சார கார்கள் உட்பட) ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் என்பதிலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டத்தில் வரி உயர்வு குறித்த இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

வரும் 2028-ஆம் ஆண்டில், இந்தியாவின் பழைய கார் சந்தையின் மொத்த மதிப்பு 73 பில்லியன் டாலராக உயரும் (இந்திய மதிப்பில் ரூ.6,21,474.41 கோடி) என ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி ‘தி எகானாமிக் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுவே 2023-ஆம் ஆண்டில் இந்தச் சந்தையின் மொத்த மதிப்பு 2,76,179.83 கோடிகள் என்று மதிப்பிடப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

பழைய மற்றும் பயன்படுத்திய கார்கள் மீது இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்நிலையில் இந்த ஜிஎஸ்டி வரி உயர்வு யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்?

By admin