• Sun. Aug 10th, 2025

24×7 Live News

Apdin News

பஸ்ஸுக்குள் கணவனின் கத்திக்குத்தில் மனைவி படுகாயம்!

Byadmin

Aug 10, 2025


பஸ்ஸுக்குள் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை காலை பதுளை, பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுக்குள் இடம்பெற்றுள்ளது என்று பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய மனைவியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி பெண் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்துச் சந்தேகநபரான கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin