• Fri. Apr 25th, 2025

24×7 Live News

Apdin News

பஹல்காமில் குதிரைக்காரர் ஆலோசனையால் 6 தமிழர்கள் தப்பியது எப்படி? இன்றைய முக்கிய செய்திகள்

Byadmin

Apr 25, 2025


இன்றைய முக்கியச் செய்திகள், தலைப்பு செய்திகள், பஹல்காம், தாக்குதல், காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய (25/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பஹல்காம் தாக்குதலின்போது அங்கு சுற்றுலா சென்றிருந்த 6 தமிழர்கள் சூழலுக்கு ஏற்ப வேகமாக, விவேகமாக எடுத்த முடிவால் உயிர் தப்பி வந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் செஞ்சியை சேர்ந்த சையத் உஸ்மான் மற்றும் அவருடைய ஐந்து நண்பர்கள் காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரனை சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர்.

தாக்குதல் நடந்த அன்று, அவர்களை அழைத்துச் சென்ற குதிரைக்காரர், உங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிவிடுங்கள் என்று கூறியுள்ளார். அவரின் ஆலோசனையைக் கேட்ட உஸ்மானும் அவருடைய நண்பர்களும் அந்த இடத்தில் இருந்து ஓடியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி தெரிவிக்கிறது.

By admin