• Fri. Apr 25th, 2025

24×7 Live News

Apdin News

பஹல்காமில் கொல்லப்பட்டவரின் மனைவி பாஜக அமைச்சரிடம் கொந்தளித்துப் பேசியது என்ன?

Byadmin

Apr 25, 2025


இறந்த ஷைலேஷ் கல்தியாவின் மனைவி ஷீத்தல் கல்தியா

பட மூலாதாரம், Rupesh Sonwane

படக்குறிப்பு, இறந்த ஷைலேஷ் கல்தியாவின் மனைவி ஷீத்தல் கல்தியா ஜம்மு காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து கேள்விகளை எழுப்பினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று குஜராத்தி சுற்றுலாப் பயணிகள் உள்பட மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர்.

சூரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஷைலேஷ் கல்தியாவின் உடல் உள்பட, தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள் புதன்கிழமையன்று ஜம்மு காஷ்மீரில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

தாக்குதலில் இறந்த ஷைலேஷ் கல்தியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​இறந்தவரின் மனைவி ஷீத்தல் கல்தியா, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் முன் தனது கோபத்தை வெளிப்படுத்தி ஜம்மு-காஷ்மீர் நிலைமையை விவரித்தார்.

“சுற்றுலாப் பயணிகளுக்கு இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தாலும், ராணுவத்திற்கு அது தெரியாது” என்று கூறிய ஷீத்தல், “காஷ்மீர் ஒரு சுற்றுலாத் தலம், ஆனாலும் அங்கு ராணுவ வீரர்கள் இல்லை, காவல் துறையினர் இல்லை, முதலுதவிப் பெட்டிகள் இல்லை. வசதிகள் இல்லை,” என்று தெரிவித்தார்.

By admin