• Thu. Apr 24th, 2025

24×7 Live News

Apdin News

பஹல்காம்: சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன – இந்தியா ஏன் நிறுத்தியுள்ளது?

Byadmin

Apr 24, 2025


சிந்து நதி நீர் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், வினீத் கரே
  • பதவி, பிபிசி செய்தியாளர்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையில் 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய அரசு நேற்று (ஏப்ரல் 23) அறிவித்தது.

பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எப்போதெல்லாம் மோதல் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து ஏன் பேசப்படுகிறது

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகள் என்ன? இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா தன்னிச்சையாக விலக முடியுமா?

By admin