• Mon. May 5th, 2025

24×7 Live News

Apdin News

‘பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம்’ – முன்னாள் ரா தலைவர் பிபிசிக்கு பேட்டி

Byadmin

May 4, 2025


ரா அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாத்
படக்குறிப்பு, ரா அமைப்பின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாத்

“பஹல்காமில் நடந்த தாக்குதலில் காஷ்மீரிகளின் மீது எந்தத் தவறும் இல்லை. அங்கிருக்கும் சிலருக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் அல்லது அதற்கான சதித் திட்டத்தில் பங்கேற்று இருக்கலாம்… ஆனால் இதற்காக அனைத்து காஷ்மீரிகளும் தண்டிக்கப்படக் கூடாது.”

இந்தக் கருத்தைக் கூறுவது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (RAW) முன்னாள் தலைவரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அமர்ஜித் சிங் துலாத்.

கடந்த மாதம் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்? இந்தியா என்ன செய்ய வேண்டும், அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில்?

இதுபோன்ற சில முக்கியமான கேள்விகளை அமர்ஜித் சிங்கிடம் கேட்டோம், அனுபவமிக்க அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை அறிய விரும்பினோம்.

By admin