• Sat. Apr 26th, 2025

24×7 Live News

Apdin News

பஹல்காம் தாக்குதல்: தீவிரவாத எதிர்ப்பில் மோதி அரசின் தோல்வியா?? நிபுணர்கள் சொல்வது என்ன?

Byadmin

Apr 26, 2025


பஹல்காம் தாக்குதல், ஜம்மு காஷ்மீர், மோதி, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடு குறித்த பிரச்னையை எழுப்பின.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசின் காஷ்மீர் கொள்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலையை மீட்டெடுப்பது என்பது பிரதமர் நரேந்திர மோதி அரசாங்கத்தின் முக்கிய வாக்குறுதியாகும்.

2019-ஆம் ஆண்டில், மத்திய அரசு 370வது பிரிவை நீக்கியது. இதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அப்போது, ​​பிரதமர் மோதி 370வது பிரிவு தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

”370வது பிரிவு என்பது காஷ்மீரில் பயங்கரவாதம், வன்முறை மற்றும் ஊழலைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது” என்று அவர் கூறியிருந்தார்.

அப்போதிருந்து பஹல்காம் தாக்குதல் வரை, மோதி அரசாங்கம் தனது ஆட்சியின் 10 ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீரில் அமைதியின் புதிய யுகம் பிறந்துவிட்டது என்று கூறி வந்தது.

By admin