• Fri. Apr 25th, 2025

24×7 Live News

Apdin News

பஹல்காம் தாக்குதல்: மினி சுவிட்சர்லாந்து பைசரன் பள்ளத்தாக்கு எப்படி இருக்கும்? அங்கு என்ன உள்ளது?

Byadmin

Apr 25, 2025


பைசரன், பஹல்காம், ஜம்மு - காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம்.

கடந்த செவ்வாயன்று தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு, அதன் பசுமை நிறைந்த அழகான புல்வெளிகளுக்குப் பெயர் பெற்றது.

ஜம்மு காஷ்மீரின் பிர் பஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ள பைசரன் பள்ளத்தாக்கு, அனந்த்நாக் மாவட்டத்தின் உள்ள பஹல்காமில் இருந்து ஐந்து – ஆறு கி.மீ தொலைவில் உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7500-8000 அடி உயரத்தில் இருக்கிறது பைசரன். இந்த அழகான பள்ளத்தாக்கானது பசுமையான புல்வெளி நிறைந்த பெரிய நிலப்பரப்பாக உள்ளது. பைன் மற்றும் தேவதாரு மரங்கள் அடங்கிய அடர் காடுகள் இதைச் சுற்றியுள்ளன. இந்தக் காடுகளுக்கு அப்பால் உள்ள பனி சூழ்ந்த மலைகள் இந்த இடத்தை மேலும் வசீகரமாக்குகிறது.

இந்த திறந்த வெளி நிலப்பரப்பில் கோடை காலங்களில் புற்களும், காட்டுமலர்களும் நிரம்பி காட்சியளிக்கும். அதே சமயம் குளிர்காலங்களில் பனிப் போர்வை போர்த்தியிருக்கும்.

By admin