• Sun. May 11th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானின் சோங்கார் டிரோன்கள் – துப்பாக்கி முதல் கையெறி குண்டு வரை சுமந்து செல்லும் அபாய எந்திரம்

Byadmin

May 11, 2025


இந்தியா - பாகிஸ்தான் மோதல், ராணுவம், போர்ப் பதற்றம், டிரோன் போர், துருக்கி, அமெரிக்கா

பட மூலாதாரம், ASISGUARD.COM

படக்குறிப்பு, மே 8ஆம் தேதி, பாகிஸ்தான் ஏராளமான டிரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், அவை துருக்கியில் தயாரிக்கப்பட்ட சோங்கார் வகை டிரோன்கள் என்றும் இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு (மே 08) பாகிஸ்தான் பல்வேறு பகுதிகளை டிரோன்கள் மூலம் குறிவைத்ததாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கர்னல் சோபியா குரேஷி, பாகிஸ்தான் ராணுவம் வியாழன் இரவு இந்தியாவின் ராணுவ உள்கட்டமைப்பைக் குறிவைத்து சுமார் 300-400 டிரோன்களை ஏவியதாகக் கூறினார்.

இருப்பினும், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இந்தத் தாக்குதலை தாங்கள் மேற்கொள்ளவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

லே முதல் சர் கிரீக் வரையிலான 36 இடங்களில் 300-400 டிரோன்களை பயன்படுத்தி ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்திய பாதுகாப்புப் படை அவற்றுக்கு நேரடித் தாக்குதல் மற்றும் மின்னணு தாக்குதல் முறைகளைப் பயன்படுத்தி அந்த டிரோன்களை வீழ்த்தியதாகவும் கர்னல் சோபியா குறிப்பிட்டார்.

By admin