• Sat. Feb 7th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 தண்டர் போர் விமானத்தை வாங்க சில நாடுகள் ஆர்வம் காட்டுவது ஏன்?

Byadmin

Feb 7, 2026


ஜே.எஃப்-17 தண்டர் போர் விமானம், பாகிஸ்தான், ஆயுத ஏற்றுமதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜே.எஃப்-17 தண்டர் போர் விமானத்தை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    • எழுதியவர், ஷயிஸ்டா பாரூக்கி

பாகிஸ்தான் தனது பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதி மற்றும் ராணுவக் கூட்டாண்மைகளைத் தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிகிறது.

இதன் மூலம் உலக அரசியல் சூழலில் செல்வாக்கையும் பொருளாதார ஆதாயங்களையும் பெற முடியும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.

முக்கிய பாகிஸ்தானிய ஊடகங்களின்படி, 2025-ஆம் ஆண்டில் லிபிய தேசிய ராணுவத்துடன் 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்தை உறுதி செய்த பிறகு, தற்போது பல நாடுகளுடன் 13 முதல் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் குறித்து பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பேச்சுவார்த்தையில் உள்ள ஒப்பந்தங்களில், சூடானுடனான 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் விமான ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாக ஜனவரி 10-ஆம் தேதி வெளியான ‘டெய்லி டைம்ஸ்’ நாளிதழ் செய்தி கூறுகிறது.

ஆயுத விற்பனைக்கு அப்பாற்பட்டு, சௌதி அரேபியா, துருக்கி, லிபியா மற்றும் சூடான் உள்ளிட்ட பல இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளுடன் பயிற்சித் திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பரந்த ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்புகள் மூலம் ஆழமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

By admin