• Sat. May 10th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதலா? – நேரலை தகவல்கள்

Byadmin

May 10, 2025


இந்தியா - பாகிஸ்தான் மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி (கோப்புப் படம்)

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவர் மீது மற்றொருவர் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

இந்தியாவின் மேற்கு எல்லையோரப் பகுதிகளை பாகிஸ்தான் தாக்கியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இந்திய ராணுவத்தின் கூடுதல் பொதுத் தகவல் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று அதிகாலை 5 மணியளவில் அமிர்தசரஸில் உள்ள காசா கான்ட் மீது பல ஆயுதமேந்திய ட்ரோன்கள் பறந்து செல்வது காணப்பட்டது. எங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை முறியடித்தது,” என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகேயுள்ள விமானப்படைத் தளத்தை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

By admin