• Sat. Aug 1st, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானிலும் உருவான கரப்பான் பூச்சி கட்சி – இளைஞர்கள் பற்றி உள்துறை அமைச்சர் கூறியது என்ன?

Byadmin

Aug 1, 2026


மொஹ்சின் நக்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் நாட்டின் ஆட்சி முறை குறித்து உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வியாழக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றிய மொஹ்சின் நக்வி, தற்போதைய ஆட்சி முறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும், நாட்டின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அடிப்படையிலேயே திறமையற்றதாக இருப்பதாகவும் கூறினார்.

இதே கூட்டத்தின்போது நக்வி கரப்பான் பூச்சிகள் குறித்தும் குறிப்பிட்டுப் பேசிய அவர், “நம் இளைஞர்களுக்கு அவர்கள் விரும்புவதை நம்மால் வழங்க முடியவில்லை. நீங்கள் அவர்களை இளைஞர்கள் என்றோ, கரப்பான் பூச்சிகள் என்றோ அல்லது நீங்கள் விரும்பும் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் இந்த கரப்பான் பூச்சிகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டால், எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட முடியும்” என்றார்.

உண்மையில், இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்களின் கருத்துக்குப் பிறகு ‘காக்ரோச் ஜனதா கட்சி’ உருவாக்கப்பட்டு, அது போராட்டம் நடத்தி கல்வி அமைச்சரை ராஜிநாமா செய்ய வைத்தது.

தங்களை “கரப்பான் பூச்சி கட்சி பாகிஸ்தான்” என்று அழைத்துக் கொள்ளும் புதிய இயக்கம் ஒன்று சமூக ஊடகங்களில் எழுந்து வரும் காலகட்டத்தில் மொஹ்சின் நக்வியின் இந்தக் கருத்துகள் வந்துள்ளன.

ஊழல், மோசமான ஆட்சி முறை, பாகிஸ்தானின் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு சவால் விடுவதே தனது நோக்கம் என்று இந்த அமைப்பு கூறி வருகிறது.

By admin