• Thu. May 8th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்திய பகுதி இப்போது எப்படி உள்ளது?

Byadmin

May 8, 2025


காணொளிக் குறிப்பு,

இந்தியா தாக்குதல் நடத்திய முரிட்கே பகுதி இப்போது எப்படி இருக்கிறது? விளக்கும் பிபிசி செய்தியாளர்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மே 7ஆம் தேதி அதிகாலையில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஷேக்புரா மாவட்டத்தில் அமைந்துள்ள முரிட்கேவும் தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில் ஒன்று.

லாஹூர் அருகிலுள்ள இந்த நகரம் முன்பு செய்திகளில் அடிக்கடி அடிபடும். ஐநாவால் “பயங்கரவாத குழுவாக” அறிவிக்கப்ட்ட லஷ்கர் இ தொய்பாவுடன் இணைந்திருந்த ஜமாத்-உத்-தாவாவின் இருப்பு இங்கிருந்ததே அதற்குக் காரணம்.

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு தளமாக இப்பகுதி பயன்படுத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பாகிஸ்தான் அந்தக் கூற்றை மறுத்துள்ளது.

மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மக்கள் உயிரிழப்பு குறித்தும் பிபிசி உருது செய்தியாளர் உமர் தராஜ் நங்கியானா கூறுவது என்ன?

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

By admin