2
பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஜனவரி 30ஆம் திகதி ஏற்பட்ட இந்தக் குண்டு வெடிப்பில் 69 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காதிஜா அல்-குப்ரா என அழைக்கப்படும் நபர் இந்த தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்தாரியின் தாய் மற்றும் சகோதரர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலை இன்னமும் கவலைக்கிடமாக உள்ளதாக மீட்புப் பணியாளர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.