• Wed. Mar 12th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் ரயிலை கடத்திய ஆயுதக் குழுவினர் – நிலவரம் என்ன?

Byadmin

Mar 11, 2025


பலூசிஸ்தான், பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குவெட்டாவில் ரயில் ஒன்றில் நிற்கும் பாகிஸ்தான் காவல்துறை அதிகாரி (கோப்புப் படம்)

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில், 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினர் கடத்தியுள்ளனர்.

ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து, தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைச் சிறைப்படுத்தியதாக பலூச் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாதக் குழு அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. மேலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் அந்த ரயில் இருப்பதாக அக்குழு கூறியுள்ளது.

ரயிலின் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் இந்தத் தாக்குதலில் காயமடைந்ததாக உள்ளூர் செய்தியாளர்களிடம் பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நிகழ்ந்த இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

By admin