• Mon. Feb 16th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலும் இந்தியாவை கவலைப்பட வைத்த ‘ஒரு விஷயம்’ என்ன? அலசல்

Byadmin

Feb 16, 2026


இந்தியா - பாகிஸ்தான் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்திருக்கிறது இந்தியா.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பை அரங்கில் பாகிஸ்தானை எட்டாவது முறையாக இந்தியா வீழ்த்தியிருக்கிறது.

61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்றிருக்கும் இந்த வெற்றி தான் இந்தியா vs பாகிஸ்தான் டி20 போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றி.

போட்டி நடந்த கொழும்பு பிரமதேசா மைதானம் பெரியது. அந்த ஆடுகளமும் பேட்டிங் செய்ய மிகவும் கடினமானதாகக் கருதப்பட்டது.

போட்டியில் பேட்டர்கள் கஷ்டப்பட்டதையும் பார்க்க முடிந்தது. 160 ரன்கள் எடுத்தாலே அது நல்ல ஸ்கோராக இருக்கும் என்று பலரும் நிலையில் இந்திய அணி 175 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து இந்தியா பெரிய ஸ்கோர் எடுக்க உதவினார்.

By admin