பாகிஸ்தானுக்கு கிடைக்கும் கடனுதவியை இந்தியா தடுக்குமா?
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட உள்ள அடுத்தக்கட்ட 7 பில்லியன் டாலர் கடனுதவி பற்றி சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) இன்று பரிசீலனை செய்ய உள்ள நிலையில் அதற்கு எதிராக இந்தியா அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஐ.எம்.எஃப்-இன் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியா தன்னுடைய பார்வையை ஐ.எம்.எஃப் முன் வைக்கும் எனத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தானுக்கான கடந்த கால கடனுதவிகள் எவ்வளவு வெற்றிகரமாக இருந்துள்ளன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்தியில் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா பிரதமர் நரேந்திர மோதியை வியாழன் அன்று சந்தித்துப் பேசினார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே தலையிட முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு