• Fri. Feb 27th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் – ஆப்கன் தாலிபன் மோதல் இந்தியாவை பாதிக்குமா? ஓர் அலசல்

Byadmin

Feb 27, 2026


எல்லையில் தாலிபன் பாதுகாப்பு படையினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானுடனான பதற்றம் நீடித்து வரும் நிலையில் எல்லையில் இருக்கும் தாலிபன் பாதுகாப்புப் படைகள்

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கும் இடையேயான மோதல் மீண்டும் வெடித்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கு எதிராக “நேரடிப் போரை” அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான சதித்திட்டங்களும் தாக்குதல்களும் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து திட்டமிடப்பட்டவை என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது, ஆனால் தாலிபன் ஆட்சி இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.

“ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கு எதிரான எங்கள் பொறுமை தீர்ந்து விட்டது, இப்போது நேரடிப் போர் இருக்கும்” என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்தார்.

“ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் உலகம் முழுவதிலும் உள்ள பயங்கரவாதிகளை திரட்டுகிறார்கள்” என கவாஜா ஆசிஃப் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ”காபூலில் உள்ள இடைக்கால அரசு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்துள்ளது” என அவர் கூறியதாக பிபிசி உருது தெரிவித்துள்ளது.

By admin