• Wed. Oct 9th, 2024

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் உள்பட உலகெங்கும் சீன தொழிலாளர்கள் குறிவைத்து தாக்கப்படுவது ஏன்?

Byadmin

Oct 9, 2024


சீனா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, பொருளாதாரம், வணிகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2007-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் கடத்தப்பட்ட இரண்டு சீனத் தொழிலாளர்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6-ஆம் தேதி), பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் இரண்டு சீனப் பிரஜைகள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (Balochistan Liberation Army – BLA) பொறுப்பேற்றுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் சீன தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களின் வரிசையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் சமீபத்தியது.

உலகெங்கிலும் உள்ள கட்டுமானத் திட்டப் பணிகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான சீனத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர் அரசியல் கொந்தளிப்பு மிக்க பகுதிகளில் உள்ளனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கடத்தப்பட்டுள்ளனர்.

By admin