• Tue. Nov 18th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் காதலரை மணக்க முஸ்லிமாக மதம் மாறிய இந்திய பெண் – பாகிஸ்தானில் தேடப்படுவது ஏன்?

Byadmin

Nov 18, 2025


48 வயதான சரப்ஜித் கவுர் என்ற சீக்கியப் பெண்

பட மூலாதாரம், Lawyer Ahmad Pasha

படக்குறிப்பு, 48 வயதான சரப்ஜித் கவுர் என்ற சீக்கியப் பெண், பாகிஸ்தான் குடிமகன் நசீர் ஹுசைனை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், நவம்பர் 13 அன்று விசா காலாவதியான பிறகும் இந்தியாவுக்குத் திரும்பாத ஒரு இந்தியப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்தப் பெண் சீக்கிய யாத்திரீகர்களுடன் பாகிஸ்தான் வந்துள்ளார். பிறகு ஒரு பாகிஸ்தான் குடிமகனை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் ஷேக்புரா மாவட்ட காவல்துறை அதிகாரி பிலால் ஜாஃபர் ஷேக் கூறுகையில், 48 வயதான சரப்ஜித் கவுர் என்ற சீக்கியப் பெண், பாகிஸ்தான் குடிமகன் நசீர் ஹுசைனை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, இருவரும் தலைமறைவாகி விட்டனர் என்று குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களைத் தேடி வரும் நிலையில், விசாரணைக்குப் பிறகு தான் முழு தகவலும் கிடைக்கும் என்று போலீசார் கூறுகின்றனர்.

சரப்ஜித் கவுர் நவம்பர் 4 ஆம் தேதி சீக்கிய யாத்திரீகர்களுடன் பாகிஸ்தானுக்கு சென்றார். மறுநாள் பாபா குரு நானக்கின் பிறந்தநாளை முன்னிட்டு நன்கானா சாஹிபுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

By admin