• Thu. May 22nd, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் கையில் அணு ஆயுதம் வந்தது எப்படி? எந்த சூழலில் அணு ஆயுதத்தை கையிலெடுக்கும்?

Byadmin

May 21, 2025


பாகிஸ்தான் அணு ஆயுதங்கள்

பட மூலாதாரம், FAROOQ NAEEM/AFP via Getty Images

படக்குறிப்பு, ஷாஹீன் 1 நடுத்தர தொலைவு பாயும் ஏவுகணை (கோப்புப்படம்)

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளிலும் உள்ள அணு ஆயுதங்கள் தொடர்பாக மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.

இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. எப்போதெல்லாம் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரிக்கிறதோ, அப்போது ஒட்டுமொத்த உலகின் கவனமும் அவற்றின் அணு ஆயுதங்கள் மீதே உள்ளன.

எனினும், அணு ஆயுதங்கள் தொடர்பான இந்த நாடுகளின் கொள்கைகள் வித்தியாசமானவை. தங்கள் நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாகக் கருதினால், அணு ஆயுதங்களை முதலில் உபயோகிப்போம் என்பது பாகிஸ்தானின் கொள்கையாக உள்ளது. ‘முதலில் உபயோகிப்போம்’ (‘First Use Policy’) என அக்கொள்கை அழைக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில், பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து இங்கே காணலாம்.

By admin