• Thu. Jan 29th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான், செளதி, துருக்கி மூன்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்தால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

Byadmin

Jan 29, 2026


பாகிஸ்தான் - செளதி - துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தம், இந்தியா கவலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான், செளதி அரேபியா மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர்கள்.

சுமார் ஓராண்டு நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாகிஸ்தான், செளதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு உற்பத்தித் துறை அமைச்சர் ரசா ஹயாத் ஹர்ராஜ் புதன்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பிராந்திய வன்முறைகள் வெடிக்கக் கூடும் என்ற அச்சங்களுக்கு மத்தியில், இந்த நாடுகள் ஒரு பொதுவான பாதுகாப்பு அரணைத் தேடுகின்றன என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மூன்று பிராந்திய சக்திகளுக்கு இடையில் ஏற்பட சாத்தியமுள்ள இந்த ஒப்பந்தம், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட செளதி-பாகிஸ்தான் இருதரப்பு ஒப்பந்தத்திலிருந்து வேறுபட்டது என்று ரசா ஹயாத் ஹர்ராஜ் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு மூன்று நாடுகளுக்கும் இடையே இறுதி உடன்பாடு அவசியம் என்றும் அவர் கூறினார்.

“பாகிஸ்தான்-செளதி அரேபியா-துருக்கி இடையிலான முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் உள்ளது,” என ஹர்ராஜ் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

By admin