• Sun. Dec 14th, 2025

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் பிரதமரை காத்திருக்க வைத்த புதின்? – துர்க்மெனிஸ்தானில் நடந்த சந்திப்பு

Byadmin

Dec 14, 2025


ஷாபாஸ் ஷெரீப், புதின், பாகிஸ்தான், ரஷ்யா, துருக்கி

பட மூலாதாரம், screengrab/Pakistan PM’s office

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12), பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், புதினை சந்தித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை ஒரு சர்வதேச அரங்கில் சந்தித்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘அமைதி மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான வழிகள்’ குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்க ஷாபாஸ் ஷெரீப் துர்க்மெனிஸ்தானின் தலைநகரான அஷ்காபத்துக்குச் சென்றிருந்தார்.

இந்த சர்வதேச மன்றத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இரான், ரஷ்யா மற்றும் துருக்கி தவிர, பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சந்தித்த பிற தலைவர்களில் துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் அதிபர்களும் அடங்குவர் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது ஷாபாஸ் ஷெரீப்புக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் இடையிலான சந்திப்பு குறித்து தான்.

By admin