• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து ஆப்கன் தாலிபனால் போரிட முடியுமா? ஆயுத பலம் பற்றிய ஒரு பார்வை

Byadmin

Feb 25, 2026


பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான், தாலிபன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 ஆம் ஆண்டு நடந்த ராணுவ அணிவகுப்பின் போது, ​​தாலிபன்கள் பக்ரம் விமான தளத்தில் ராணுவ உபகரணங்களை காட்சிப்படுத்தினர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் இடைக்கால அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகம் அந்நாட்டின் கிழக்கு மாகாணங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு “சரியான நேரத்தில் வலுவாக எதிர்வினையாற்றப்படும்” எனவும் எச்சரித்துள்ளது.

பிப்ரவரி 22 அன்று எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக தாலிபன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல்கள் ஒரு ‘குற்ற செயல்’ என்றும் ‘ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் மீதான அப்பட்டமான மீறல்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அறிக்கையில், “தேசிய பாதுகாப்பு அமைச்சகம் நாட்டின் இறையாண்மையையும் மக்களின் பாதுகாப்பையும் தேசிய மற்றும் மதக் கடமையாக கருதுகிறது. இந்த செயலுக்கு தகுந்த நேரத்தில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என உறுதியளிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார், பக்திகா மற்றும் கோஸ்ட் ஆகிய மாகாணங்களில் அமைந்துள்ள டிடிபியின் (டெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான்) ஏழு முகாம்கள் மற்றும் மற்ற தீவிரவாத இலக்குகளை வான்வழி தாக்குதல் மூலம் அழித்ததாக பாகிஸ்தானின் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.

By admin