• Sat. Feb 21st, 2026

24×7 Live News

Apdin News

“பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிப்பு” – இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல் ஐபிஎல் எல்லையைத் தாண்டுகிறதா?

Byadmin

Feb 21, 2026


தி ஹண்ட்ரட் லீக்கில் உள்ள சில உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை எடுக்க தயங்குவதாகத் தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தி ஹண்ட்ரட் லீக்கில் உள்ள சில உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை எடுக்க தயங்குவதாகத் தெரிகிறது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘த ஹண்ட்ரட்’ ஏலத்திற்கு, இந்திய உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைப் பரிசீலிக்கவில்லை என்று பிபிசி ஸ்போர்ட் செய்தியிடம் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றங்களின் காரணமாக, 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இடம்பெறவில்லை.

‘த ஹண்ட்ரட்’ தொடர் ஐபிஎல் போல் இங்கிலாந்தின் பிரதான பிரான்சைஸ் லீகாக செயல்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகள் வழக்கமான 120 பந்துகள் (20 ஓவர்கள்) கொண்ட போட்டிகளாக அல்லாமல் 100 பந்துகள் கொண்ட போட்டிகளாக விளையாடப்படும்.

இந்தத் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் உள்ளன. அவற்றில் நான்கு அணிகள் ஐபிஎல் அணிகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின் உரிமையின் கீழ் உள்ளன.

அந்த 4 அணிகளின் உரிமையாளர்கள் விவரம்:

By admin