• Tue. Dec 16th, 2025

24×7 Live News

Apdin News

பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவர் நிதின் நபின் யார்? முழு பின்னணி

Byadmin

Dec 16, 2025


நிதின் நபின் - பாஜக புதிய தேசிய செயல் தலைவர்

பட மூலாதாரம், BJP

பிகார் மாநில அமைச்சர் நிதின் நபின் பாரதிய ஜனதா தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட கடிதத்தில், “பாஜக-வின் நாடாளுமன்றக் குழு, பிகார் மாநில அரசின் அமைச்சர் நிதின் நபினை கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமித்துள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின்படி, நிதின் நபின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

நிதின் நபின், பிகார் மாநில அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவின் கட்சிப் பொறுப்பாளராகவும் உள்ளார்.

பாஜக செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின், பாஜகவின் மூத்தத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

By admin