• Tue. Jan 20th, 2026

24×7 Live News

Apdin News

பாஜகவின் புதிய தேசிய தலைவர்: நிதின் நபின் எதிர்கொள்ளும் 5 முக்கிய சவால்கள்

Byadmin

Jan 20, 2026


நிதின் நபின்

பட மூலாதாரம், @NitinNabin

படக்குறிப்பு, 45 வயதான நிதின் நபின் பாஜகவின் 12வது தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

1968 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரான போது, அவருக்கு 44 வயது மட்டுமே.

எல்.கே. அத்வானியும் 1973ஆம் ஆண்டு தனது 46-வது வயதில் ஜன சங்கத்தின் தலைவரானார். 1977-இல் பாரதிய ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்தது. இருப்பினும், இந்த இணைப்பு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை.

ஏப்ரல் 6, 1980 அன்று பாரதிய ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது, அதன் முதல் தலைவராக அடல் பிஹாரி வாஜ்பாய் பொறுப்பேற்றார்.

அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாற்றாக உருவெடுக்க பாஜக முயற்சி செய்து கொண்டிருந்தது. 1984 மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டு இடங்களை மட்டுமே வென்றது.

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி தனது “மை கண்ட்ரி,மை லைப்ஃ”என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

By admin