• Mon. Mar 23rd, 2026

24×7 Live News

Apdin News

பாஜகவில் இருந்து விலகிய சாய் சரவணன் குமார், திருபுவனை தொகுதி TVK வேட்பாளராக அறிவிப்பு!

Byadmin

Mar 23, 2026


புதுச்சேரியின் 30 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 24-ம் தேதியுடன் புதுவையில் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் போட்டியிடும் 30 பேர் கொண்ட த.வெ.க. வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிட்டார். விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், புதுச்சேரி பாஜகவில் இருந்து நேற்று காலையில் விலகிய சாய் சரவணன் குமார், இரவில் திருபுவனை தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021-ல் பாஜக சார்பில் வென்ற இவர், 2025 ஜூன் வரை முதலமைச்சர் ரங்கசாமியின் அமைச்சரவையில் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin