• Tue. Feb 3rd, 2026

24×7 Live News

Apdin News

பாஜகவுக்கு கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை வழங்கிய 5 தனி நபர்கள் யார்?

Byadmin

Feb 3, 2026


பாஜக, நன்கொடை

பட மூலாதாரம், Getty Images

உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை நீக்கி உத்தரவிட்டது.

இதன்பின், 2024-25 நிதியாண்டில் பாஜக சுமார் ரூ. 6,000 கோடி நன்கொடையை பெற்றுள்ளது.

இதில் 3,689 கோடி ரூபாயை தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக பெற்றது. இது, மொத்த நன்கொடையில் தோராயமாக 62%.

இந்திய நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு பெற்ற எந்தவொரு நிறுவனமும் தேர்தல் அறக்கட்டளையை அமைக்க முடியும்.

இந்திய குடிமகன் எவரும் அல்லது இந்தியாவில் பதிவுபெற்ற எந்தவொரு நிறுவனமும் இந்து கூட்டுக் குடும்பம் (Hindu Undivided Family – ஒரு மூதாதையரின் வழித்தோன்றல்களைக் கொண்ட குடும்பத்தைக் குறிக்கிறது.) அல்லது இந்தியாவில் வசிக்கும் நபர்களின் குழு ஆகியோர் இந்த தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க முடியும்.

By admin