• Tue. Apr 15th, 2025

24×7 Live News

Apdin News

​பாஜகவுடனான கூட்டணி அறிவிப்பால் அதிமுகவினர் மகிழ்ச்சி; எதிர்தரப்பு​கள் அதிர்ச்சி | admk bjp alliance shocking to opposite parties

Byadmin

Apr 14, 2025


சென்னை: தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில் பாஜக கூட்​டணி அறிவிக்​கப்​பட்ட நிலை​யில், அதி​முகவைச் சேர்ந்​தவர்​கள் மகிழ்ச்​சி​யடைந்​துள்​ளனர். அதே​நேரம் திமுக கூட்​டணி மற்​றும் தவெக தரப்பு அதிர்ச்​சி​யடைந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு இன்​னும் 9 மாதங்​களே உள்ள நிலை​யில், திமுக தனது கூட்​ட​ணியை அப்​படியே தக்க வைத்​து, தேர்​தலை சந்​திக்க ஆயத்​த​மாகி வரு​கிறது. அவ்​வப்​போது நடை​பெற்ற சில சம்​பவங்​கள், விசிக திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி​விடுமோ என்ற சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது. ஆனால், திமுக கூட்​ட​ணி​யில் தான் இருப்​போம் என்​பதை திரு​மாவளவன் தொடர்ந்து உறு​திப்​படுத்தி வரு​கிறார்.

ஆனால், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, எந்த காலத்​தி​லும் பாஜக​வுடன் கூட்​டணி இல்லை என்றே தொடர்ந்து தெரி​வித்து வந்​தார். ஆனால், கடந்த மார்ச் 25-ம் தேதி காட்​சிகள் மாறின. அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி திடீரென மார்ச் 25ம் தேதி டெல்லி சென்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை சந்​தித்​தார். தமிழக நலனுக்​காக சந்​தித்​த​தாக அவர் கூறி​னாலும், கூட்​டணி பேச்​சு​தான் என்​பதை பாஜக தரப்பு உறு​திப்​படுத்​தி​யது.

முன்​ன​தாக, சட்​டப்​பேர​வை​யில், நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு, பாஜகவை மனதில் வைத்து ‘தப்பு கணக்கு போட வேண்​டாம்’

என்று அதி​முகவை கேட்​டுக் கொண்​டார். அதற்கு அதி​முக கொறடா எஸ்​.பி. வேலுமணி எம்​ஜிஆர், ஜெயலலி​தாவை போல் சரி​யான கணக்​கைத் தான் பழனி​சாமி போடு​வார் என்று எதிர்​வினை​யாற்​றி​னார்.

அதே​போல், முதல்​வர் மு.க.ஸ்​டா​லினும் அதி​முக, பாஜக​வுடன் ரகசிய கூட்​டணி வைத்​திருப்​ப​தாக தொடர்ந்து தெரி​வித்து வந்​தார். அத்​துடன் சட்​டப்​பேர​வை​யில்,” தங்​கமணி கூட்​டணி கணக்​கில் ஏமாற​மாட்​டோம் என்று தெரி​வித்​திருந்​தார். நீங்​கள் ஏமாறாமல் இருந்​தால் வாழ்த்​துக்​கள்” என்று தெரி​வித்​தார்.இதுத​விர, வக்பு சட்​டத்​திருத்​தம், கச்​சத்​தீவு மீட்பு தொடர்​பாக தமிழக அரசின் தீர்​மானங்​களை அதி​முக ஆதரித்​தது. இதனால் அதி​முக, பாஜக பக்​கம் செல்ல வாய்ப்​பில்லை என்​பது போல் தோன்​றியது.

ஆனால், மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் சென்னை வரு​கை, அதி​முக குறித்த திமுக​வின் கணிப்பை மாற்​றி​விட்​டது. நேற்று முன்​தினம் சென்​னை​யில் மத்​திய அமைச்​சர் அமித் ஷா, ஆடிட்​டர் குரு​மூர்த்​தி​யுடன் ஆலோ​சனை நடத்​தி, அங்​கிருந்​த​படியே அதி​முக தரப்​பினரிடம் பேசி, மாலை​யில் கிண்​டி​யில் உள்ள ஓட்​டலில், அரு​கில் பழனி​சாமி உள்​ளிட்​டோரை வைத்​துக் கொண்​டே, அதி​முக தலை​மை​யில்​தான் கூட்​டணி என்று அறி​வித்​தார்.

அந்த நிகழ்​வில், பழனி​சாமி எது​வும் பேசா​விட்​டாலும், அவரது வீட்​டில் நடை​பெற்ற விருந்​தில் அமித் ஷா உள்​ளிட்​டோர் பங்​கேற்று 45 நிமிடங்​களுக்​கும் மேலாக பேசி​யது இந்த கூட்​டணிதான் தேர்​தலை சந்​திக்​கப் போகிறது என்​பதை உறு​திப்​படுத்​தி​யது.

அத்​துடன், ஓபிஎஸ், தினகரன் குறித்த கேள்விக்​கு, அதி​முக உட்​கட்சி விவ​காரத்​தில் பாஜக தலை​யி​டாது என்று கூறி, அதி​முக தலைமை சிக்​கி​யுள்ள நெருக்​கடிக்​கும் முற்​றுப்​புள்ளி வைத்​தார். அதி​முகவை பொறுத்​தவரை, கடந்த நாடாளு​மன்ற தேர்​தலின் போதே பாஜக​வுட​னான கூட்​டணி குறித்து பேசப்​பட்டு வந்​தது. ஆனால் கூட்​டணி அமைக்க பழனி​சாமி சம்​ம​திக்​க​வில்​லை. தனித்​தனி​யாக பாஜக​வும், அதி​முக​வும் கூட்​டணி அமைத்​த​தால், திமுக எளி​தாக தமிழகம், புதுச்​சேரி​யில் 40 தொகு​தி​களை​யும் கைப்​பற்​றியது.

ஆனால், தேர்​தல் முடிவை ஒப்பு நோக்​கும் போது, இரு கூட்​ட​ணி​யும் இணைந்​திருந்​தால் குறைந்த பட்​சம் 15 இடங்​கள் அதி​முக, பாஜக தரப்​புக்கு கிடைத்​திருக்​கும் என்​பது தெரிந்​தது.

வாக்கு சதவீதம் அதிகரிப்பு: நாடாளு​மன்ற தேர்​தல், சட்​டப்​பேரவை தேர்​தல் இடை​யில் பெரிய அளவில் தமிழகத்​தில் வாக்கு சதவீதம் வித்​தி​யாசப்பட வாய்ப்பு இல்லை என்​பதும், பாஜக​வுக்கு தற்​போது வாக்கு சதவீதம் அதி​கரித்​துள்​ளதை​யும் கருத்​தில் கொண்​டே, இருதரப்​பும் பேசி கூட்​ட​ணியை உறுதி செய்​த​தாக தெரி​கிறது.

இந்த கூட்​டணி அறி​விப்​பால், அதி​முக​வினர் மகிழ்ச்​சி​யடைந்​துள்​ளனர். குறிப்​பாக தமிழக பாஜக தலை​வ​ராக இருந்த அண்​ணா​மலை நீக்​கப்​பட்​டது, நயி​னார் நாகேந்​திரன் புதிய தலை​வ​ராக தேர்​வானது ஆகிய​வை​யும் அதி​முக​வினருக்கு மிகுந்த நம்​பிக்​கையை அளித்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அதி​முக மற்​றும் பாஜக தரப்பு இந்த கூட்​ட​ணியை முழு​மை​யாக வரவேற்று அடுத்த கட்​ட​மாக கூட்​ட​ணி​யில் யாரை சேர்ப்​பது, எத்​தனை தொகு​தி​கள் என பேச தொடங்​கி​விட்ட நிலை​யில், திமுக கூட்​ட​ணியை அதிர்ச்​சி​யடைய செய்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதன் விளை​வாகவே நேற்று முன்​தினம் இரவே, பழனி​சாமி தமிழகத்​துக்கு துரோகம் செய்​து​விட்​ட​தாக கனி​மொழி எம்​.பி. விமர்​சித்​த​தாக​வும், நேற்று காலை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தோல்விக் கூட்​டணி என்று தன் பங்​குக்கு சாடி​யுள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது. ஆனால், இதற்கு தகுந்த பதிலை அதி​முக தரப்​பும் தெரி​வித்து வரு​கிறது. இதுத​விர, திமுககூட்​டணி கட்​சி​யினரும் அதி​முகவை விமர்​சித்து வரு​கின்​றனர். திமுக கூட்​டணி தவிர தவெக​வும் பாஜக​வுட​னான அதி​முக​வின் கூட்​ட​ணியை விமர்​சித்​துள்​ளது.இந்த நிலை​யில், அதி​முக தரப்​போ, திமுகவை வீழ்த்​து​வதே எங்​கள் இலக்​கு. அதற்​கான கூட்​ட​ணி​யில் இணைந்​துள்​ளோம் என்று ஒரே வரி​யில் விமர்​சனங்​களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.



By admin